295 . தடுக்கி விழுந்தோரை
E – Maj | 6 / 8 | T – 130
தடுக்கி விழுந்தோரை தாங்குகிறீர்
தாழ்த்தப்பட்டோரை தூக்குகிறீர்
தகப்பனே தந்தையே உமக்குத்தான் ஆராதனை
1 . போற்றுதலுக்குரிய பெரியவரே
தூயவர் தூயவரே
எல்லாருக்கும் நன்மை செய்பவரே
இரக்கம் மிகுந்தவரே
உன் நாமம் உயரணுமே
அது உலகெங்கும் பரவணுமே
2 , உம்மை நோக்கி மன்றாடும் , யாவருக்கும்
அருகில் இருக்கின்றீர்
கூப்பிடுதல் கேட்டு , குறை நீக்குவீர்
விருப்பம் நிறைவேற்றுவீர் – உன்
3 . உயிரினங்கள் எல்லாம் , உம்மைத்தானே
நோக்கிப் பார்க்கின்றன
ஏற்றவேளையில் உணவளித்து
ஏக்கமெல்லாம் நிறைவேற்றுவீர்
4 . அன்பு கூறும் எங்களை அரவணைத்து
அதிசயம் செய்கின்றீர்
பற்றிக்கொண்ட யாவரையும் பாதுகாத்து
பரலோகம் கூட்டிச் செல்வீர்