Back

297. Vilukuthu vilukuthu | விழுகுது விழுகுது 

297 . விழுகுது விழுகுது 

D – Maj / 214 / T – 130 

விழுகுது விழுகுது எரிகோ கோட்டை 

எழும்புது எழும்புது இயேசுவின் படை 

துதிப்போம் சாத்தானை ஜெயிப்போம் 

துதிப்போம் தேசத்தைச் சொந்தமாக்குவோம் 

1 . யோசுவாவின் சந்ததி நாமே 

தேசத்தைச் சுதந்தரிப்போமே 

உடன்படிக்கை பெட்டி நம்மோடு 

ஊர் ஊராய் வலம் வருவோமே – துதிப்போம் 

2 . கால் மிதிக்கும் எவ்விடத்தையும் 

கர்த்தர் தந்திடுவாரே 

எதிர்த்து நிற்க எவராலுமே 

முடியாதென்று வாக்குரைத்தாரே
 

3 . மோசேயோடு இருந்ததுபோல 

சேனைகளின் கர்த்தர் நம்மோடு 

தளபதியாய் முன் செல்கிறார் 

தளர்ந்திடாமல் பின் தொடர்வோம் 

4 . அச்சமின்றி துணிந்து செல்வோமே 

அறிக்கை செய்து ஆர்ப்பரிப்போமே 

கர்த்தர் வார்த்தை நம் வாயிலே 

நிச்சயமாய் வெற்றி பெறுவோம்
 

5 . தேசத்து எதிரிகளெல்லாம் 

திகில் பிடித்து நடுங்குகின்றனர் 

கர்த்தர் செய்யும் அற்புதங்களை 

கேள்விப்பட்டு கலங்குகின்றனர் 

6 . செங்கடலை வற்றச் செய்தவர் 

சீக்கிரத்தில் வெற்றி தருவார் 

யோர்தானை நிற்கச் செய்தவர் – நம் 

பாரதத்தை ஆளுகை செய்வார்

We use cookies to give you the best experience. Cookie Policy