Back

301 . Nambikaiku uriyavarae | நம்பிக்கைக்கு உரியவரே 

301 . நம்பிக்கைக்கு உரியவரே 

D – min | 4 / 4 | T – 110 

நம்பிக்கைக்கு உரியவரே 

நம்பி வந்தேன் உம் சமூகம் 

நம்புகிறேன் உம் வசனம் 

1 . சொந்த ஆற்றலை நம்பவில்லை 

தந்தை உம்மையே சார்ந்துவிட்டேன் 

வாக்குத்தத்தம் செய்தவரே 

வாழ்க்கையெல்லாம் வார்த்தைதானே 

பாதைக்குத் தீபம் பேதைக்கு வெளிச்சம் 

உந்தன் வசனமே ; 

ஆற்றல் மிக்கது ஜீவனுள்ளது 

உந்தன் அருள்வாக்கு 

2 . உம்மை நம்புகின்ற மனிதர்களை 

உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும் 

உள்ளமெல்லாம் மகிழுதைய்யா 

உம் வசனம் நம்புவதால்

3 , தீமை அணைத்தையும் விட்டு விலகி 

உமக்கு அஞ்சி தன் நடந்து கொண்டால் 

எலும்புகள் உரம் பெறும்

என் உடலும் நலம் பெறும்
 

4 , புயலின் நடுவிலே பக்தன் பவுல் 

வார்ததை வந்ததால் திடன் கொண்டவர் 

கைதியாக கப்பல் ஏறி 

கேப்டனாக செயல்பட்டார் 

5 . வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி 

திரளாய் பேதுரு மீன்கள் பிடித்தார் 

உம் வலையில் பிடிபட்டார் 

தலைவனாக செயல்பட்டார் 

We use cookies to give you the best experience. Cookie Policy