302 . ஆகாதது எதுவுமில்லை
E – min / 6 / 8 / T – 110
ஆகாதது எதுவுமில்ல – உம்மால்
ஆகாதது எதுவுமில்ல
அகிலம் அனைத்தையும்
உண்டாக்கி ஆளுகின்றீர்
1 . துதி செய்யத் தொடங்கியதும் எதிரிகள் தங்களுக்குள்
வெட்டுண்டு மடியச் செய்தீர்
உம்மால் ஆகும் , எல்லாம் ஆகும் – 2
2 . அலங்கார வாசலிலே அலங்கோல முடவனன்று
நடந்தானே இயேசு நாமத்தில்
3 . கோலும் கையுமாக பிழைக்கச் சென்றார் யாக்கோபு
பெருகச் செய்தீர் பெருங்கூட்டமாய்
4 . கண்ணீரைக் கண்டதாலே கல்லறைக்குச் சென்றவனை
கரம் பிடித்துத் தூக்கி விட்டீர்
5 . ஈசாக்கு ஜெபித்ததாலே ரெபேக்காள் கருவுற்று
இரட்டையர்கள் பெற்றெடுத்தாளே
6 . எலியாவின் வார்த்தையாலே சாறிபாத் விதவை வீட்டில்
எண்ணெய் மாவு குறையவில்லையே
7 . ஜெப வீரன் தானியேலை சிங்கங்களின் குகையினிலே
சேதமின்றிக் காப்பாற்றினீர்
8 . கானாவூரில் வார்த்தை சொல்ல கப்பர்நகூம் சிறுவனங்கே
சுகமானான் அந்நேரமே
9 . தண்ணீரால் ஜாடிகளை கீழ்ப்படிந்து நிரப்பினதால்
திராட்சை ரசம் வந்ததையா