303 . கற்று தந்து
F – Maj / 4 / 4 | T – 100
கற்றுத் தந்து நடத்துகிறீர்
கண்டித்து உணர்த்தி போதிக்கிறீர்
ஆவியானவரே தூய ஆவியானவரே
1 . என்றென்றைக்கும் எங்களுடன்
எப்போதும் கூட இருக்கின்றீர்
சத்திய ஆவியானவரே
சாட்சியாய் வாழச் செய்பவரே
2 . போதிக்கின்றீர் சத்தியங்களை
நினைவூட்டுகின்றீர் வசனங்களை
அனைத்தையும் சொல்லித் தருகின்ற
ஆலோசகர் நீர்தானய்யா
3 . தேவனுக்குகந்த பலியாக
அர்ப்பண வாழ்வு நான் வாழ
மகிமைமேல் மகிமை தருகின்றீர்
மறுரூபமாக்கி மகிழ்கின்றீர்
4 . ஊழியம் செய்ய பிரித்தெடுத்து
உலகெங்கும் தூது அனுப்புகிறீர்
நற்செய்தி அருளும் நாயகரே
உற்சாகப்படுத்தும் உன்னதரே
5 . முழு உண்மை நோக்கி நடத்துகிறீர்
வரப்போகும் அனைத்தும் தெரிவிக்கிறீர்
தினம் தினம் தேற்றும் துணையாளரே
எனையாண்டு நடத்தும் மணவாளரே
6 . உலகம் உம்மை அறிவதில்லை
பெற்றுக் கொள்ள முடிவதில்லை
எங்களுக்குள் நீர் ஜீவிக்கின்றீர்
இதயத் துடிப்பாய் இயங்குகின்றீர்