Back

305 . Ummaithan | உம்மைத்தான் 

305 . உம்மைத்தான் 

C – Maj / 4 / 4 / T – 90 

உம்மைத்தான் பாடுவேன் 

உயிர் தந்த தெய்வமே 

உமக்காய் ஓடுவேன் 

உயிருள்ள நாளெல்லாம் 

ஆராதனை ஆராதனை 

தகப்பனே உமக்குத்தான் 

1 . உமது சித்தத்தால் உலகமே வந்தது 

உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர் 

2 . நீரே சிருஷ்டித்தீர் , காண்கின்ற அனைத்தையும் 

நீரே படைத்தீர் , வானம் பூமி அனைத்தும் 

3 . கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார் ? 

உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார் ? 

4 . ஜனங்கள் யாவரும் , வணங்குவார் உம்மையே 

தேசம் அனைத்தும் , இயேசு நாமம் சொல்லும் – 

5 , வல்லவர் , சர்வ வல்லவர் , ஆளுகை செய்கின்றீர் 

மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன் 

6 . உலகின் நாடுகள் , உமக்கே உரியன . 

நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர் 

7 . பெலனும் , ஞானமும் , உமக்கே உரியன 

மாட்சிமை , வல்லமை , உமக்குத்தானே சொந்தம் 

We use cookies to give you the best experience. Cookie Policy