Back

307 . Uraividamai therinthu | உறைவிடமாய் தெரிந்து 

307 . உறைவிடமாய் தெரிந்து 

G – min / 4 / 4 / T – 100 

உறைவிடமாய் தெரிந்து கொண்டு 

உலவுகிறீர் என் உள்ளத்திலே 

பிள்ளையாக ஏற்றுக்கொண்டு 

பேசுகிறீர் என் இதயத்திலே 

அப்பா தகப்பனே உம்மைப் பாடுவேன் 

ஆயுள் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன் 

1 . நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தம் ஏது ? 

ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியம் ஏது ? 

விட்டு விட்டேன் பிரிந்து விட்டேன் 

தீட்டானதைத் தொடமாட்டேன் 

2 . உலக போக்கோடு உறவு எனக்கில்லை 

சாத்தான் செயல்களோடு தொடர்பு எனக்கில்லை 

3 . தூய்மையாக்கினேன் ஆவி ஆத்மாவை 

தெய்வ பயத்துடன் பூரணப்படுத்துவேன்
 

4 . பயனற்ற இருளின் செயல்களை வெறுக்கிறேன் – அதை 

செய்யும் மனிதரை கடிந்து கொள்கிறேன் 

5 . அந்நிய நுகத்தோடு பிணைப்பு எனக்கில்லை 

அவிசுவாசிகளின் ஐக்கியம் எனக்கில்லை 

We use cookies to give you the best experience. Cookie Policy