312 . நிர்மூலமாகாதிருப்பது
F – min / 4 / 4 / T – 110
நிர்மூலமாகாதிருப்பது உந்தன் மா கிருபை
முடிவே இல்லாதது உந்தன் மனதுருக்கம் – நான்
கிருபை கிருபை மாறாத கிருபை
1 . கிருபையினாலே இரட்சித்தீரே
நீதிமானாக மாற்றினீரே
உயிர்த்தெழச் செய்தீர் கிறிஸ்துவோடே கூட
உன்னதங்களிலே அமரச் செய்தீர்
2 , கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக
சொந்த பிள்ளையாய் முன்குறித்தீரே
பரிசுத்த இரத்தத்தால் மீட்பளித்தீரே
பாவம் அனைத்தையும் மன்னித்தீரே
3 . தேவனின் பலத்த சத்துவத்தாலே
நற்செய்தி அறிவிக்கும் திருத்தொண்டனானேன்
கிறிஸ்து இயேசுவின் அளவற்ற செல்வத்தை
அறிவிக்கின்றேன் நான் கிருபையினால்
4 . ஜீவனைப் பார்க்கிலும் மேலானது
உந்தன் கிருபை மேலானது .
அழிவில்லா அன்புடன் அன்பு கூர்ந்தேன்
ஆர்வமாய் இன்னும் அன்பு கூர்வேன்
5 . காலைதோறும் புதியது
உந்தன் கிருபை புதியது
காத்திருப்பேன் உம் பாதத்தில்
களிகூர்வேன் உம் கிருபையில்
6 . இயேசுவை அறிகிற அறிவினாலே
அமைதியும் கிருபையும் பெருகிடுதே
நம்பிக்கை வளர்ந்தால் கிருபை வளரும்
நாளும் பொழுதும் சூழ்ந்துகொள்ளும்
7 . தாயின் வயிற்றில் இருந்தபோதே
பிரித்தெடுத்தீரே , அழைத்தீரே
ஆவியை அளித்து , அற்புதம் செய்து
ஆசீர்வதித்தீர் அதிசயம் செய்தீர்