315 . உந்தன் வல்லமையால்
E – Maj / 4 / 4 / T – 105
உந்தன் வல்லமையால் மகிழ்ந்திருக்கின்றேன்
உந்தன் தயவினால் அசைவுராதிருப்பேன்
நீர் போதுமே என் நேசரே
உம்மால் தானே மேன்மை வந்தது
1 . கேட்டேன் வாய்விட்டு ( நீர் ) மறுக்கவில்லையே
உள்ளம் விரும்பினதை எனக்குத் தந்தீரே – என்
2 . வெற்றி தந்ததால் ( நான் ) பெரியவனானேன் – நீர்
மேன்மை வந்ததால் என் ஏழ்மை மாறியது
3 . வாழ ஓடி வந்தேன் சுகம் தேடி வந்தேன்
நீண்ட வாழ்வோடு நித்திய ஜீவன் தந்தீர்
4 . பூரிப்படைகின்றேன் உந்தன் பேரன்பால்
பெலன் பெறுகின்றேன் உம்மை நம்புவதால் – நான்