Back

316 . Elunthu Bethel | எழுந்து பெத்தேல் 

316 . எழுந்து பெத்தேல் 

E – min / 2014 / T – 135 

எழுந்து பெத்தேலுக்கு போ 

அதுதானே தகப்பன் வீடு 

நன்மைகள் பல செய்த 

நல்லவர் இயேசுவுக்கு 

நன்றி பாடல் பாடணும் 

துதி பலிபீடம் கட்டணும் 

1 . ஆபத்து நாளிலே பதில் தந்தாரே 

அதற்கு நன்றி சொல்வோம் 

நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரே 

அதற்கு நன்றி சொல்வோம் 

அப்பா தகப்பனே நன்றி நன்றி – 2 

எழுந்து பெத்தேல் செல்வோம் 

2 . போகுமிடமெல்லாம் கூடயிருந்து  

காத்துக் கொள்வேனென்றீர் 

சொன்னதைச் செய்து முடிக்கும் வரைக்கும் 

கைவிட மாட்டேனென்றீர் 

3 . பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும் 

ஆதரித்த ஆயரே 

ஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டு 

வணங்கிய எங்கள் தெய்வமே 

4 . எல்லா தீமைக்கும் நீங்கலாக்கி 

என்னை மீட்டீரையா 

வாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்து 

நடத்தி வந்தீரையா 

5 . படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும் 

என்று வாக்குரைத்தீரையா 

பலுகிப் பெருகி தேசமாய் மாறுவோம் 

என்று வாக்குரைத்தீரையா 

6 . அந்நிய தெய்வங்கள் அருவருப்புகள் 

அகற்றி புதைத்திடுவோம் 

ஆடை மாற்றுவோம் தூய்மையாக்குவோம் 

பாடிக் கொண்டாடுவோம்
  

7 . வெறுங்கையோடு பயந்து ஓடிய யாக்கோபை 

தெரிந்து கொண்டீர் 

இஸ்ராயேல் இனமாய் ஆசீர்வதித்து 

பலுகிப்பெருகச் செய்தீர்

We use cookies to give you the best experience. Cookie Policy