317 . உம்மையல்லாமல்
D – Maj / 4 / 4 | T – 95
உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு ?
உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு ?
ஆசையெல்லாம் நீர்தானைய்யா
தேவையெல்லாம் நீர்தானைய்யா
இரட்சகரே . . . இயேசுநாதா . . . .
தேவையெல்லாம் நீர்தானே
1 . இதயக்கன்மலை நீர்தானய்யா
உரிய பங்கும் நீர்தானய்யா
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்துத் தாங்குகிறீர் – ஆசை –
2 : உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்த்துடிப்பு
உமது விருப்பம்போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக் கொள்வீர்
3 . உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்