Back

318 . Magalae seeyon | மகளே சீயோன்

318 . மகளே சீயோன் 

E – Maj / 4 / 4 / T – 105 

மகளே சீயோன் மகிழ்ச்சியாலே ஆர்ப்பரி 

இஸ்ராயேலே ஆரவாரம் செய்திடு 

முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து களிகூரு 

கெம்பீரித்துப் பாடிப் பாடி மகிழ்ந்திடு 

அகமகிழ்ந்து களிகூரு 

ஆரவாரம் செய்திடு – ( 2 ) 

1 . தள்ளிவிட்டார் உன் தண்டனையை 

அகற்றிவிட்டார் உன் பகைவர்களை 

வந்துவிட்டார் அவர் உன் நடுவில் 

இனி நீ தீங்கைக் காணமாட்டாய் – அகமகிழ் – 

2 . உன் பொருட்டு அவர் மகிழ்கின்றார் 

உன்னைக் குறித்து அவர் பாடுகின்றார் 

அனுதினமும் அவர் அன்பினாலே 

புது உயிர் உனக்குத் தருகின்றார் 

3 . தளரவிடாதே உன் கைகளை 

பயப்படாதே நீ அஞ்சாதே 

இனி நீ இழிவு அடையமாட்டாய் 

உனது துன்பம் நீக்கிவிட்டார் . 

4 . உலகெங்கும் பெயர் புகழ்பெறச் செய்வேன் 

அவமானம் நீக்கி ஆசீர்வதிப்பேன் 

ஒதுக்கப்பட்ட உன்னைச் சேர்த்துக் கொள்வேன் 

ஊனமுற்ற உன்னைக் காப்பாற்றுவேன்

We use cookies to give you the best experience. Cookie Policy