Back

328 . Jebam | ஜெபம் 

328 . ஜெபம் 

B – Min / 4 / 4 / T – 105 

ஜெபம் கேட்டீரையா ஜெயம் தந்தீரையா 

தள்ளாட விடவில்லையே தாங்கியே நடத்தினீரே 

புகழ்கின்றேன் பாட்டுப்பாடி 

புயல் இன்று ஓய்ந்தது 

புது ராகம் பிறந்தது 

நன்றி அப்பா நல்லவரே 

இன்றும் என்றும் வல்லவரே 

1. கண்ணீரைக் கண்டீரையா 

கரம் பிடித்தீரையா 

விண்ணப்பம் கேட்டீரையா 

விடுதலை தந்தீரையா – புகழ்கின்றேன் 

2 . எபிநேசர் நீர்தானையா 

இதுவரை உதவினீரே 

எல்ரோயீ நீர்தானையா 

என்னையும் கண்டீரையா 

3 . உறுதியாய் பற்றிக் கொண்டேன் 

உம்மையே நம்பி உள்ளேன் 

பூரண சமாதானரே 

போதுமே உம் சமூகமே

We use cookies to give you the best experience. Cookie Policy