332 . வானங்களே
D – min / 4 / 4 / T – 125
வானங்களே மகிழ்ந்து பாடுங்கள்
மண்ணுலகே , புகழ்ந்து துதிபாடு
சர்வ வல்லவர் தம் ஜனத்திற்கு
ஆறுதல் தருகிறார்
சிறுமைப்பட்ட தம் மக்கள் மீது
இரக்கம் காட்டுகிறார்
1 . கைவிட்டாரே மறந்தாரே என்று நீ சொல்வானேன்
பால் குடிக்கும் பாலகனை தாய் மறப்பாளோ ?
மறந்து போவாளோ ?
கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காதிருப்பாளோ ?
இரங்காதிருப்பாளோ ?
தாய் மறந்தாலும்
தகப்பன் உன்னை மறக்கவே மாட்டார்
உள்ளங்கையிலே
அவர் உன்னை பொறித்து வைத்துள்ளார்
2 . கண்களை நீ ஏறெடுத்துப் பார்
சுற்றிலும் பார் மகளே ( மகனே )
உன்னைப் பாழாக்கினவர்கள்
புறப்பட்டுப் போகிறார்கள்
தூரமாய்ப் போகிறார்கள்
பெருங்கூட்டம் சபையைத் தேடி வருகின்றது
பாடி மகிழ்கின்றது
பாழடைந்த இடங்களெல்லாம் துதியால் நிரம்பிடுதே
அணிகலன் போல் நம் தேசத்தை
சபை நீ அணிந்து கொள்வாய்