Back

335 . Sugam | சுகம் 

335 . சுகம் 

F – Maj / 4 / 4 / T – 85 

சுகம் தரவேண்டும் யேகோவா ரஃப்பா – இன்று 

இயேசு நாமத்தினால் இயேசு இரத்தத்தினால் 

தூய ஆவியின் வல்லமையால் ( 2 ) 

1 . நிமிரமுடியாத மகளை அன்று 

நிமிர்ந்து துதிக்கச் செய்தீர் 

நிரந்தரமாய் குணமாக்கி 

உமக்காய் வாழச் செய்தீர் – சுகம் 

2 . தொழுநோய்கள் சுகமானதே 

உம் திருக்கரம் தொட்டதால் 

கடும் வியாதிகள் விலகியதே 

உமது வல்லமையால் 

3 . பிறவியிலே முடவர் அன்று 

உம் நாமத்தில் நடந்தாரே 

பெரும்பாடுள்ள பெண் அன்று 

சாட்சி பகர்ந்தாளே 

4 . லேகியோனை தேடிச் சென்று 

உம்பாதம் அமரச் செய்தீர் 

தெக்கப்போலி நாடெங்கும் 

உம் நாமம் பரவச் செய்தீர் 

5 . பேதுரு மாமி குணமாக்கினீர் 

பணிவிடை செய்ய வைத்தீர் 

பேய் பிடித்த அநேகரை 

அதட்டி விடுவித்தீர் 

We use cookies to give you the best experience. Cookie Policy