336 . உம்மைத்தானே
C – Maj / 4 / 4 / T – 85
உம்மைத்தானே நான் முழு உள்ளத்தோடு
நேசிக்கிறேன் தினமும்
உயிரோடு நான் வாழும் நாட்களெல்லாம்
உம்மைத்தான் நேசிக்கிறேன்
1 . மாலை நேரத்திலே அழுகையென்றாலே .
காலையில் ஆனந்தமே
இன்றைய துன்பமெல்லாம் நாளைய இன்பமாகும்
நடப்பதெல்லாம் நன்மைக்கே
அல்லேலூயா ஆராதனை ( 4 )
2 . நொறுங்கின இதயம் உடைந்த உள்ளம்
அருகில் நீர் இருக்கின்றீர்
ஒடுங்கிப்போன உள்ளம் தேடி
காயம் கட்டுகின்றீர்
3 . நீதிமான் வேதனை
அநேகமாயிருக்கும் அநேகமாயிருக்கும்
விடுவிக்கின்றீர் அவை அனைத்தினின்றும்
வெற்றியும் தருகின்றீர்
4 . புலம்பி நான் அழுதேன் மாற்றினீரே
நடனமாட வைத்தீர்
துயரத்தின் ஆடையை நீக்கினீரே
துதிக்கச் செய்தீரையா