Back

337 . Baliyidu | பலியிடு

D – min / 6 / 8 / T – 110 

பலியிடு துதி பலியிடு 

வலி விலகும் வாழ வழி பிறக்கும் 

துதி பலி அது சுகந்த வாசனை 

நன்றி பலி அது உகந்த காணிக்கை 

1 . துதி பலி செலுத்திட பொருத்தனை செய்ததும் 

மீன் அன்று கக்கியது கரையிலே 

யோனாவை கக்கியது கரையிலே – அன்று 

2 . நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர் 

சுகந்த வாசனையாய் 

பலுகிப் பெருகச் செய்தார் – அன்று 

3 . நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில் 

ஆலயத்தை மேகம் மூடியது 

கண்டார்கள் கர்த்தர் மகிமையை 

4 . சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால் 

கட்டுக்கள் கழன்று போயின 

ஜெயிலர் இரட்சிக்கப்பட்டான் 

அந்த அதிகாரி இரட்சிக்கப்பட்டான்

5 . துதி செய்யத் தொடங்கினதும் 

எதிரிகள் தங்களுக்குள் 

வெட்டுண்டு மடிந்து போயினர் 

எல்லாரும் பிரேதமானார்கள் 

We use cookies to give you the best experience. Cookie Policy