Back

338 . Uyirulla Thirubaliyai | உயிருள்ள திருப்பலியாய் 

E Maj / 4 / 4 / T – 95 

உயிருள்ள திருப்பலியாய் 

உடலைப் படைக்கின்றேன் 

உள்ளம் தந்து விட்டேன் 

தகப்பனே தந்து விட்டேன் 

தங்கிவிடும் நிரந்தரமாய் 

1 . உலகப்போக்கில் நடப்பதில்லை 

ஒத்த வேஷம் தரிப்பதில்லை 

என் மனம் புதிதாக வேண்டும் 

திருச்சித்தம் புரிந்து வாழ வேண்டும் – தகப்பனே 

2 . உள்ளத்தின் நினைவுகள் உமக்கு 

உகந்தனவாய் இருப்பதாக 

நாவின் சொற்கள் எல்லாம் 

ஏற்றனவாய் இருப்பதாக 

3 . எண்ணங்கள் ஏக்கங்கள் உமதாகணும் 

இன்னும் அதிகமாய் நேசிக்கணும் 

உன்னதர் பணி செய்ய வேண்டும் 

என் உயிர் இருக்கும் வரை 

We use cookies to give you the best experience. Cookie Policy