C Maj / 3 / 4 / T – 130
உயிரினும் மேலானது
உந்தன் பேரன்பு
எனவே பாடுகிறேன்
என் உயிர் இருக்கும் வரை
1 . உம்மைத்தானே உறுதியுடன்
தினமும் பற்றிக் கொண்டேன்
உம் நிழலில் தானே களிகூர்ந்து
தினமும் பாடுகிறேன்
உந்தன் மனதுருக்கம் தினமும் தாங்குதய்யா
போற்றி போற்றி புகழ்கின்றேன்
வாழ்த்தி வாழ்த்தி வணங்குகின்றேன் – உயிரி
2 , பகலெல்லாம் பாடுகின்றேன்
இரவெல்லாம் தியானிக்கின்றேன்
ஏங்குதய்யா என் இதயம்
திருமுகம் காண வேண்டும்
எப்போது வருவீரையா எதிர்நோக்கி ஓடுகிறேன்
உம் நினைவால் சோகமானேன்
எப்போது வருவீரையா – போற்றி
3 . நீரே என் தேவன் அதிகாலை தேடுகிறேன்
உம் சமுகம் ஓடி வந்தேன் இதுதானே என் விருந்து
உம் திருவசனம் தியானிக்கிறேன்
அதுதானே என் மருந்து ,
மறுரூபமாகணுமே மகிமையில் மூழ்கணுமே