Back

345 . Nalla Porchevakanaai | நல்ல போர்ச்சேவகனாய் 

E Maj / 6 / 8 / T – 118 

நல்ல போர்ச்சேவகனாய் – வரும் 

பாடுகளில் பங்கு பெறுவோம் 

தேவன் தரும் பெலத்தால் வரும் 

தீமைகளை தாங்கிடுவோம் – நல்ல 

1 . பக்தியோடு வாழ விரும்பும் 

பக்தர்கள் யாவருக்கும் 

பாடுகள் வரும் என்று 

பவுல் அன்று சொல்லிவைத்தாரே – தேவன்

2 . வேதனைகள் வழியாகத்தான் 

இறையாட்சியில் நுழைய முடியும் 

சிலுவை சுமந்தால்தான் 

சீடனாக வாழ முடியும் 

3 . துன்பங்களை சுமக்கும் போதெல்லாம் 

வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன் 

வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட 

ஜீவகிரீடம் பெற்றுக் கொள்வோம்

4 . இயேசுவின் நாமத்தினிமித்தம் 

எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள் 

என்று இயேசு சொல்லி வைத்தாரே 

அதுதானே நடக்கிறது

We use cookies to give you the best experience. Cookie Policy