Back

348 . Aanantha Magilchi | ஆனந்த மகிழ்ச்சி

D – Maj / 4 / 4 | T – 85

ஆனந்த மகிழ்ச்சி அப்பா சமுகத்தில் 

எப்போதும் இருக்கையிலே 

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய் 

ஏன் ஏன் நீ புலம்புகிறாய் 

1 . கர்த்தரை நம்பும் ஒருவன் மேலும் 

குற்றம் சுமராது 

காத்திடுவார் உயர்த்திடுவார் 

காத்து நடத்திடுவார் 

2 . தெரிந்து கொண்டாரே தாசன் நீ தான் 

சிநேகிதனும் நீ தான் 

அழைத்த தெய்வம் ஆகாதவன் என்று 

தள்ளி விட மாட்டார்  

3 . கைகள் நீட்டு கோலை உயர்த்து 

கடலைப் பிரித்து விடு – உன் 

காய்ந்த தரையில் நடந்து போவாய் 

எதிரி ( வியாதி ) காணமாட்டாய் 

4 . உனக்கு முன்னே அவர் சமுகம் செல்லும் 

கோணல்கள் நேராகும் 

வெண்கல இரும்பு கதவுகள் உடையும் 

புதையல் உனதாகும் – 2 

இந்த தேசம் உனதாகும் 

5 , அஞ்சவே மாட்டேன் கர்த்தர் என் சகாயர் 

என்று நீ அறிக்கையிடு 

மனிதர் எனக்கு என்ன செய்ய முடியும் 

என்று தினம் கூறு

We use cookies to give you the best experience. Cookie Policy