ஒப்பற்ற என் செல்வமே
ஓ எந்தன் இயேசு நாதா பிலி . 3 : 8 – 11
உம்மை நான் அறிந்து உறவாட
உம் பாதம் ஓடி வந்தேன் – நான்
உம் பாதம் ஓடி வந்தேன்
1 . உம்மை நான் ஆதாயமாக்கவும்
உம்மோடு ஒன்றாகவும்
எல்லாமே குப்பை என
எந்நாளும் கருதுகிறேன்
2 . என் விருப்பம் எல்லாமே
இயேசுவே நீர் தானன்றோ
உமது மகிமை ஒன்றே
உள்ளத்தின் ஏக்கம் ஐயா – என்
3 . கடந்ததை மறந்தேன்
கண் முன்னால் என் இயேசு தான்
தொடர்ந்து ஓடுவேன்
தொல்லைகள் என்ன செய்யும் லூக் 10 : 39