D Maj / 6 / 8 / T – 112
என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானே
தாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானே
வியத்தகு முறையில் என்னைப் படைத்தீரே
நன்றி நவில்கின்றேன்
நன்றி உமக்கு நன்றி ( 4 ) – அப்பா
1 . அமர்வதையும் எழுவதையும்
அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்
எண்ணங்களை என் ஏக்கங்களை – என் ( 2 )
எல்லாமே அறிந்திருக்கின்றீர் – அப்பா
2 . உம்மை விட்டு மறைவாக
எங்கே நான் ஓட முடியும்
உம் சமூகம் இல்லாமலே
எங்கே வாழ முடியும் – அப்பா
3 . உம்மை வருத்தும் காரியங்கள்
இல்லாமல் அகற்றி விடும்
நித்தியமான உம் பாதையில்
நித்தமும் நடத்துமையா
4 . நடப்பதையும் படுப்பதையும் நன்கு
நீர் அறிந்திருக்கின்றீர்
என் வழிகள் என் செயல்கள்
உமக்குத் தெரியும் அன்றோ
5 . என் முன்னும் என் பின்னும்
சுற்றிச் சூழ்ந்து இருக்கின்றீர்
பற்றிப் பிடிக்கின்றீர் உம் கரத்தாலே
முற்றிலும் அதிசயமே