Back

352 . En Meetbar | என் மீட்பர் 

D- Min / 4 / 4 | T – 85 

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் 

எப்போது நான் நிற்கப் போகிறேன் 

ஏங்குகிறேன் உம்மைக் காண 

எப்போது உம் முகம் காண்பேன் 

தாகமாய் இருக்கிறேன் 

அதிகமாய்த் துதிக்கிறேன் – நான்

1 . மானானது நீரோடையை 

தேடி தவிப்பது போல் 

என் நெஞ்சம் உம்மைக்காண 

ஏங்கித் தவிக்கிறது – தாகமாய் 

2 . பகற்காலத்தில் உம் பேரன்பை 

கட்டளையிடுகிறீர் 

இராக்காலத்தில் உம் திருப்பாடல் 

என் நாவில் ஒலிக்கிறது 

3 . ஆத்துமாவே நீ கலங்குவதேன் 

நம்பிக்கை இழப்பதேன் – என் 

கர்த்தரையே நீ நம்பியிரு 

அவர் செயல்கள் ( செயல்களை ) நினைத்துத் துதி 

ஜீவனுள்ள தேவன் 

அவர் சீக்கிரம் வருகிறார் – ஏங்குகிறேன் 

We use cookies to give you the best experience. Cookie Policy