E- Min / 4 / 4 / T – 100 ,
நித்திய நித்தியமாய்
உம் நேம் ( Name ) நிலைத்திருக்கும்
தலைமுறை தலைமுறைக்கும்
உம் பேம் ( Fame ) பேசப்படும்
நித்தியமே ( என் ) சத்தியமே
நிரந்தரம் நீர்தானையா
1 . யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே
இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீரே
வல்லவர் நீர்தானே
நல்லவர் நீர்தானே
நான் பாடும் பாடல் நீர்தானே
தினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே
2 . வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர்
மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர்
பெரியவர் நீர்தானே – என்
பிரியமும் நீர்தானே – நான் பாடும்
3 . வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீரே – உம்
சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச் செய்தீரே
சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே – நான் பாடும்
4 . வருடத்தை நன்மையினால் முடிசூட்டுகிறீர்
பாதையெல்லாம் நெய்யாகப் பொழியச் செய்கின்றீர்
காண்பவர் நீர் தானே
தினம் காப்பவர் நீர்தானே – நான் பாடும்
5 . மண்ணுலகை விசாரித்து மகிழச் செய்கின்றீர்
தானியங்கள் விளையச் செய்ய தண்ணீர் பாய்ச்சுகிறீர்
மீட்பர் நீர்தானே ( என் )
மேய்ப்பர் நீர்தானே – நான் பாடும்