Back

354 . Perumalai | பெருமழை

E – Maj / 4 / 4 / T – 105 

பெருமழை பெருவெள்ளம் வரப்போகுது 

விரைவில் வரப்போகுது 

வந்துவிடு நுழைந்துவிடு – ( இயேசு ) 

இராஜாவின் பேழைக்குள் – நீ 

1 . மலைகள் அமிழ்ந்த ன ( எல்லாம் ) 

உயிர்களும் மாண்டன 

பேழையோ உயர்ந்தது 

மேலே மிதந்தது – வந்துவிடு 

2 . குடும்பமாய் பேழைக்குள் 

எட்டுப்பேர் நுழைந்தனர் 

கர்த்தரோ மறவாமல் 

நினைவு கூர்ந்தாரே 

3 . நீதிமானாய் இருந்ததால் 

உத்தமனாய் வாழ்ந்ததால் – நோவா 

கர்த்தரோடு நடந்ததால் 

கிருபை கிடைத்தது 

4 . பெருங்காற்று வீசச் செய்தார் 

தண்ணீர் வற்றச் செய்தார் 

நோவா பீடம் கட்டி 

துதி பலி செலுத்தினார் 

We use cookies to give you the best experience. Cookie Policy