Back

355 . Enna Nadanthalum | என்ன நடந்தாலும் 

F- Min / 4 / 4 / T – 90 

என்ன நடந்தாலும் யார் கைவிட்டாலும் 

உமக்கு நன்றி சொல்வேன் 

உமது புகழ் பாடுவேன் 

1 . தேடி வந்தீரே தெரிந்து கொண்டீரே 

தூய மகனாக்கினீர் 

துதிக்கும் மகளாக்கினீர் – இராஜா 

இதயம் நிறைந்த நன்றி சொல்லுவேன் 

இரவும் பகலும் புகழ் பாடுவேன் – என்ன 

2 . ஆவியினாலே அன்பை ( யே ) ஊற்றி 

பாவங்கள் நீக்கினீரே 

சுபாவங்கள் மாற்றினீரே – இராஜா 

3 . இராஜாவின் திருமுகம் காண்கின்ற நாளை 

எதிர்நோக்கி ஓடுகிறேன் – இயேசு 

நினைத்துப் பாடுகிறேன் – இராஜா 

4 . இரத்தத்தினாலே ஒப்புரவாக்கி 

உறவாடச் செய்தீரையா 

உம்மோடு இனணத்தீரையா 

5 . மரணத்தை அழித்து அழியா ஜீவனை 

அறிமுகப்படுத்தினீரே 

அறிவிக்க அழைத்தீரே – இதை 

We use cookies to give you the best experience. Cookie Policy