D- Maj | 4 / 4 |T – 90
எப்போதும் உம்மோடுதான்
உம் வலக்கரம் என்னோடுதான்
என் வாஞ்சையெல்லாம் நீர்தானே
என் வாழ்க்கையெல்லாம் உம் புகழ்தானே
ஆராதனை ஆராதனை ( 2 )
ஆயுள் இருக்கும்வரை ( என் ) – எப்போதும்
1 . பரலோகத்தில் உம்மையல்லாமல்
எனக்கு யாருண்டு
பூலோகத்தில் உம்மைத்தவிர
வேறே விருப்பமில்லை – எனக்கு
2 . என்றென்றைக்கும் என் உள்ளத்தின்
பெலனே நீர்தானையா
உம் சித்தம் போல நடத்துகிறீர்
மகிமையில் ஏற்றுக் கொள்வீர் – உம்
3 . காருண்யத்தின் கயிறுகளால்
கட்டி என்னை இழுத்துக் கொண்டீர்
பேரன்பினால் அணைத்துக் கொண்டீர் – உம்
பெரியவனாக்கி விட்டீர் – என்னைப்
4 . கழுத்தில் உள்ள நுகம் நீக்கி
நிமிர்ந்து நடக்கச் செய்தீர் – என்
கற்றுக் கொடுத்தீர் கரம் பிடித்து
கைவிடாமல் காப்பாற்றினீர் – இதுவரை
5 . உம்மைத்தானே அடைக்கலமாய்
அண்டிக் கொண்டேன் அனுதினமும்
புகலிடமே என் மறைவிடமே
உம் புகழ்தனை சொல்லி வருவேன்