E – Maj / 4 / 4 / T – 95
உன்னதரே உம்
பாதுகாப்பில் வாழ்கின்றேன் – சர்வ
வல்லவரே உம் நிழலில்தான்
தங்கியுள்ளேன்
புகலிடமே அடைக்கலமே
கோட்டையே நம்பிக்கையே
1 . பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது
வேடனின் கண்ணி ஒன்றும் செய்யாது
காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே – புகலிடமே
2 . படைத்தவரை புகலிடமாய்க் கொண்டுள்ளேன்
பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார்
தீங்கு நிகழாது ( ஒரு ) நோயும் அணுகாது
3 . வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார்
மிதிப்பேன் சிங்கத்தையே நான்
நடப்பேன் சர்ப்பத்தின்மேல்
4 . சிறகுகளால் அரவணைத்து மூடுகிறீர் .
உம் சமூகம்தான் நிரந்தர நீரோடை
நிமிரச் செய்தீரே நிரந்தரமானீரே – தலை
5 . இரவில் வரும் திகிலுக்கு
நான் பயப்படேன்
பகலில் வரும் சோதனைகளை மேற்கொள்வேன் .
ஆயிரம் எனக்கெதிராய் வந்தாலும் பயமில்லையே
6 . கர்த்தரிடத்தில் வாஞ்சையாய் இருப்பதால்
விடுதலையும் ஜெய வாழ்வும் எனக்குண்டு
நாமம் அறிந்ததினால் உயர்வு உண்டெனக்கு
7 . உம்மை நோக்கி மன்றாடும் போதெல்லாம்
பதில் தந்து கனப்படுத்தும் தகப்பன் நீரே
நீடிய ஆயுள் உண்டு நிச்சயம் வெற்றி உண்டு