E – Maj / 4 / 4 / T – 95
நம்பத்தக்க தகப்பனே
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
உம்மைத்தானே நம்பியுள்ளேன்
நம்பத்தக்க தகப்பனே
வாழ்வே வழியே
வாழ்த்துகிறேன் உம்மை வணங்குகிறேன்
1 . உம் சமூகம் குடியிருந்து
சத்தியத்தை உணவாக்கினேன்
வசனம் தியானம் செய்து ( உம் )
வார்த்தையால் வாழ்கின்றேன் – வாழ்வே
2 . இதய விருப்பமெல்லாம்
எப்படியும் நிறைவேற்றுவீர் – என்
ஒப்படைத்தேன் வழிகளெல்லாம்
உம்மையே சார்ந்து கொண்டேன்
3 . நீதி நேர்மையெல்லாம்
பட்டப்பகல் போலாகும் – என்
நீர் எனக்குள் இருப்பதனால்
எல்லாம் செய்து முடிப்பீர்