E – Maj / 6 / 8 / T – 100
ஏன் மகனே ( மகளே ) இன்னும்
இன்னும் பயம் உனக்கு
ஏன் நம்பிக்கை இல்லை ?
உன்னோடு நான் இருக்க
உன் படகு மூழ்கிடுமோ ?
கரை சேர்ந்திடுவாய் ! ( நீ ) கலங்காதே
1 . நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார் – உன்னில்
திகிலூட்டும் காரியங்கள்
செய்திடுவார் உன் வழியாய் – கரை
2 , நீதியினால் ஸ்திரப்படுவாய்
கொடுமைக்கு நீ தூரமாவாய்
திகில் உன்னை அணுகாது .
பயமில்லா வாழ்வு உண்டு
3 . படைத்தவரே உனக்குள்ளே
செயலாற்றி மகிழ்கின்றார் உன்னைப்
விருப்பத்தையும் ஆற்றலையும்
தருகின்றார் அவர் சித்தம் செய்ய
4 . வழுவாமல் காத்திடுவார்
நீதிமானாய் நிறுத்திடுவார்
மகிமையுள்ள அவர் சமூகத்திலே
மகிழ்வோடு நிற்கச் செய்வார்
5 . வழி தவறி சாய்ந்தாலும் இதுதான்
வழி குரல் கேட்கும்
கூப்பிடுதல் சத்தம் கேட்பார்
மனம் இரங்கி பதிலளிப்பார்