Back

367 . Asattai Pannathae | அசட்டை 

F- min / 2 / 4 / T – 115 

அசட்டை பண்ணாதே அவித்து விடாதே 

ஆவியானவர் உனக்குள்ளே 

அனல்மூட்டு எரியவிடு 

கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது 

காரிருள் மத்தியில் நித்திய வெளிச்சம் நீ 

எழுந்து ஒளிவீசு நித்திய வெளிச்சம் நீ – அசட்டை 

1 . ஆவியில் நிறைந்து அந்நிய பாஷை 

அனுதினம் நீ பேசினால் 

வல்லமை வெளிப்படும் 

வரங்கள் செயல்படும் 

அசட்டை பண்ணாதே அசதியாயிராதே – அசட்டை 

2 . திருவசனம் நீ தினம் தினம் வாசி 

சப்தமாய் அறிக்கையிடு 

பெருகிடும் உன் ஊற்று 

அது நதியாய் பாய்ந்திடும் 

3 . வெளிச்சம் தேடி அதிகாரக் கூட்டம் ( M . L . A , M . Pக்கள் ) 

வேகமாய் வருவார்கள் – உன் 

( உன் ) கண்கள் அதைக் காணும் 

( உன் ) இதயம் அகமகிழும் – எழுந்து ஒளி 

4 . நன்றிப்பாடல் ஸ்தோத்திர கீதம் 

நாள்தோறும் நீ பாடினால் 

கட்டுக்கள் உடைந்திடும் 

கதவுகள் திறந்திடும் 

5 . கேதாரின் ஆடுகள் நெபாயோத்தின் கடாக்கள் 

பலிபீடத்தில் ஏறும் 

மகிமையின் தேவாலயம் 

மகிமைப்படுத்துவேன் 

6 . சின்னவன் ஆயிரம் சிறியவன் 

பலத்த தேசமாய் மாறிடுவான் 

துரிதமாய் செய்திடுவார் 

ஏற்றகாலத்திலே – கர்த்தர்  

We use cookies to give you the best experience. Cookie Policy