Back

37 . En Athumaavum | என் ஆத்துமாவும்

C – Maj / 3 / 4 / T – 135 

என் ஆத்துமாவும் சரீரமும்

 என் ஆண்டவர்க்கே சொந்தம் 

இனி வாழ்வது நானல்ல 

என்னில் இயேசு வாழ்கின்றார் கலா . 2 : 20 

இயேசு தேவா அர்ப்பணித்தேன் 

என்னையே நான் அர்ப்பணித்தேன் ரோம் . 12 : 1 

ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும் 

என் இதயம் வாசம் செய்யும்

 1 . அப்பா உம் திருசித்தம் – என் 

அன்றாட உணவையா யோவா . 4 : 34 

நான் தப்பாமல் உம் பாதம் 

தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன் 

2 . கர்த்தாவே உம் கரத்தில் 

நான் களிமண் போலானேன் 

உந்தன் இஷ்டம் போல் வனைந்திடும் 

என்னை எந்நாளும் நடத்திடும் ஏசா . 64 : 8

We use cookies to give you the best experience. Cookie Policy