Back

370 . Athin athin Kaalathil | அதினதின் காலத்தில் 

D min / 3 / 4  / T – 127 

அதினதின் காலத்தில் ஒவ்வொன்றையும் 

நேர்த்தியாய் செம்மையாய் செய்பவரே 

இயேசையா இயேசையா என் தெய்வம் நீர்தானய்யா 

1 . நம்பிக்கை வீண்போகாது 

நிச்சயமாய் முடிவு உண்டு – என் 

நற்செயல்கள் தொடங்கினீரே 

எப்படியும் செய்து முடிப்பீர் 

உறுதியாய் நம்புகிறேன் 

எப்படியும் ( என் வழியாய் ) செய்து முடிப்பீர் – இயேசையா – 

2 . திகிலூட்டும் செயல்கள் செய்வேன் 

உன்னோடு இருப்பேன் என்றீர் 

என் ஜனங்கள் மத்தியிலே 

என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் 

உறுதியாய் நம்புகிறேன் 

என்னை நீர் மேன்மைப்படுத்துவீர் 

3 . இந்நாளில் இருப்பதை விட 

ஆயிரமாய் பெருகச் செய்வீர் 

வானத்து விண்மீன் போல 

உலகெங்கும் ஒளி வீசுவேன் 

உறுதியாய் நம்புகிறேன் 

உலகமெங்கும் ஒளி வீசுவேன் 

We use cookies to give you the best experience. Cookie Policy