E – Maj 4 / 4 T – 95
பரலோக கார்மேகமே
பரிசுத்த மெய் தீபமே
உயிராய் வந்தீரைய்யா
உணர்வே நீர்தானைய்யா – என்
ஆவியானவரே என் ஆற்றலானவரே – பரலோக
1 . அறிவு புகட்டுகின்ற
நல் ஆவியாய் வந்தீரே
இறுதிவரை என்றென்றைக்கும்
எனக்குள்ளே வாழ்பவரே – ஆவியானவரே
2 . மேன்மையாய் உயர்த்தினீரே
இன்பமாய் பாடுகிறேன்
இறைவாக்கு என் நாவிலே
என் வழியாய் பேசுகிறீர்
3 . மறுரூப மலை நீரே
மகிமையின் சிகரம் நீரே
உருமாற்றம் அடைகின்றேன்
உம்மேக நிழல்தனிலே
4 . விண்ணக பனித்துளியாய்
மண்ணகம் வந்தீரே
புதிதாக்கும் பரிசுத்தரே
உருவாக்கும் உன்னதரே
5 . தகப்பனை அறிந்துகொள்ள
வெளிப்பாடு தருகின்றீர்
அவர் விருப்பம் நிறைவேற்ற
ஞானம் தந்து நடத்துகின்றீர்
6 . அக்கினி ஸ்தம்பமாக
மேக நிழலாக
தவறாமல் நடத்துகிறீர்
விலகாமல் முன் செல்கிறீர்
7 . அப்பா பிதாவே என்று
கூப்பிடச் செய்தீரே
பிள்ளையானேன் உம் பிரசன்னத்தால்
பெலனடைந்தேன் உம் வரவால்