Back

372 . Sugam Belan | சுகம் பெலன்

D min  6 / 8 /  T – 95



சுகம் பெலன் எனக்குள்ளே பாய்ந்து செல்லுதே 

வல்லமை நதியாய் பரவி பாயுதே 

இரத்தக்குழாய்கள் கண்கள் செவி வாய் 

தமனி எங்கும் பாய்கின்றதே 


உம் வல்லமையால் சுகமானேன் 

உம் வார்த்தையால் சுகமானேன் 

உம் தழும்புகளால் சுகமானேன் 

உம் தயவினால் சுகமானேன் – சுகம் பெலன் 


இயேசையா இரட்சகரே 

சுகம் தரும் என் தெய்வமே – உம் வல்லமை 


1 . முதுகுத்தண்டு இதயம் மூளை நரம்பு இரத்தம் 

வல்லமை பாய்கின்றதே 

குடல் தோல் கணையம் இரைப்பை வயிறு 

சதை எங்கும் பாய்கின்றதே – இயேசையா 


2 . முட்டு ஈரல் மூட்டு கைகால் திசுக்கள் 

வல்லமை பாய்கின்றதே 

எலும்பு நரம்புகள் சிறுநீரகங்கள் 

தலையெங்கும் பாய்கின்றதே 


3 . கர்ப்பப்பை கட்டி காயங்கள் புண்கள் 

வல்லமை பாய்கின்றதே 

முடக்குவாதங்கள் நுரையீரல்கள் 

சுவாசம் எங்கும் பாய்கின்றதே 


4 . புதிய படைப்பு நானே தேவபுத்திரன் ஆனேன் 

இயேசுவே என் குடும்ப மருத்துவர் – அவர் 

நாமத்தினால் இரத்தத்தினால் சுகமானேன் 

We use cookies to give you the best experience. Cookie Policy