Back

373 . Vazhiyai Kartharukku | வழியைக் கர்த்தருக்கு 

E – min | 2 / 4 | T – 105 


வழியைக் கர்த்தருக்குக் கொடுத்துவிடு 

அவரையே நம்பியிரு – உன் 

காரியத்தை வாய்க்கச் செய்வார் 

உன் சார்பில் செயலாற்றுவார் 


காத்திரு பொறுத்திரு 

கர்த்தரையே நம்பியிரு 

காரியத்தை வாய்க்கச் செய்வார் 

உன் சார்பில் செயலாற்றுவார் – வழியை 


1 . தீயவன் செயல் குறித்து 

மனம் பதறாதே 

புல்லைப் போல் உலர்ந்து 

பூவைப் போல உதிர்ந்து 

இல்லாமல் போய்விடும் – காத்திரு 


2 . மகிழ்ந்து களிகூரு 

தொடர்ந்து துதிபாடு 

உன் இதயத்தின் வாஞ்சை 

விருப்பங்கள் எல்லாம் 

விரைவில் நிறைவேற்றுவார் 


3 . நீதிமான் அனைவருக்கும் 

வெற்றி உண்டு வெகு விரைவில் 

துணைநின்று கர்த்தரோ நடத்திச் செல்வார் 

துரிதமாய் ஜெயம் தருவார் 


4 . உனது நேர்மையெல்லாம்

அதிகாலை வெளிச்சமாகும் 

நண்பகல் போலாகும் 

உன் நீதி நியாயம் 

நண்பா கலங்காதே 


5 . கோபத்தை விட்டுவிடு 

சினம் நீ கொள்ளாதே 

பொறாமை எரிச்சல் ஒருபோதும் வேண்டாம் 

அது தீமைக்கு வழிநடத்தும் 

We use cookies to give you the best experience. Cookie Policy