Back

375 . Oru Naalum Veenagathu | ஒருநாளும் வீணாகாது 

D – Maj / 6 / 8 / T – 115  


ஒருநாளும் வீணாகாது 

நீ ஓடும் ஓட்டம் நீ செய்யும் ஊழியம் 

ஒரு நாளும் வீணாகாது 


1 . கர்த்தரே உனக்குள்ளே 

செயலாற்றி மகிழ்கின்றார் 

அவர் விருப்பம் நீ செய்திட 

ஆற்றல் தருகின்றார் 

தொடர்ந்து ஓடு விட்டுவிடாதே 

பணி செய்வதை நீ நிறுத்திவிடாதே – ஒருநாளும் அ . 


2 . பிடித்துக் கொள் ஜீவவசனம் 

பிரகாசி கிறிஸ்து இயேசுவுக்காய் 

நெறி கெட்ட சமுதாயத்தில் 

நீதானே நட்சத்திரம் – தொடர்ந்து 


3 . அவமானம் நிந்தை எல்லாம் 

அனுதின உணவு போல 

பழிச்சொல் எதிர்ப்பு எல்லாம் 

பெலன் தரும் ஊட்டச்சத்து – தொடர்ந்து 


4 . கண்களை பதித்துவிடு  

கர்த்தராம் இயேசுவின் மேல் 

சிலுவை சுமந்ததனால் 

சிங்காசனம் அமர்ந்துவிட்டார் – தொடர்ந்து 

We use cookies to give you the best experience. Cookie Policy