D – Maj / 2 / 4 / T – 120
என் பாத்திரம் நிரம்பி நிரம்பி வழிகின்றது
வழிந்து ஓடுகின்றது
எனக்குள்ளே ஜீவ ஊற்று
அது வற்றாது ஒரு நாளும் – என் பாத்திரம்
1 . அபிஷேக நதி நானே
அகிலமெங்கும் பரவிடுவேன்
ஏராளமான மீன்கள் திரளான உயிரினங்கள்
நதி பாயும் இடமெல்லாம்
நான் போகும் இடமெல்லாம் – எனக்கு
2 . ஆனந்த தைலம் நானே
புலம்பலுக்கு எதிரானேன்
துதிஉடை போர்த்திடுவேன் சாம்பல் நீக்கிடுவேன்
அலங்காரமாக்கிடுவேன் – சபையை
3 . கனி கொடுக்கும் மரம் நானே
நாள்தோறும் ( புதுக் ) கனி கொடுப்பேன்
இலைகள் உதிர்வதில்லை கனிகள் கெடுவதில்லை – என்
விருந்தும் மருந்தும் நானே – சபைக்கு
4 . முழங்கிடுவேன் தினம் சுவிசேஷம்
ஒடுக்கப்பட்ட இந்த உலகத்திற்கு
காயங்கள் ஆற்றிடுவேன் கட்டுக்கள் அவிழ்த்திடுவேன்
விடுதலை பறைசாற்றுவேன்
5 . அயல்மொழிகள் தினம் பேசிடுவேன்
இறைவாக்கு உரைத்திடுவேன்
சாத்தானை துரத்திடுவேன் கரம் நீட்டி சுகம் கூறுவேன்
அதிசயம் தினம் காண்பேன்