C – min 4 / 4 T – 90
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் உன்னை ஆசீர்வதிப்பார்
தகதிமி தகஜனு தகதிமி தகஜனு
தகதிமி தகஜனு தகதிமி தகஜனு ஆ . . . . ஆ – 2
1 . கர்த்தருக்கு பயந்து
வழிகளில் நடக்கின்ற நீ
பாக்கியவான் பாக்கியவான்
உழைப்பின் பயனை நீ
உண்பது நிச்சயமே நிச்சயமே – ஆபிரகாமின்
2 . நன்மையும் பாக்கியமும்
உன் வாழ்வில் நீ காண்பாய்
செல்வமும் ஆஸ்தியும் தேடி வரும் தினமும்
ஜீவனுள்ள நாட்களெல்லாம்
செழிப்பை நீ காண்பாய் நீ காண்பாய் – ஆபிரகாமின்
3 . இல்லத்தில் உன் மனைவி
கனிதரும் திராட்சைச் செடி
பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகள்போல் வளர்வார்கள்
பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பது
நிச்சயமே நிச்சயமே . . . . . . – ஆபிரகாமின்