Back

378 . Nenjae Nee | நெஞ்சே நீ 

D – Maj 4 / 4 T – 90 

நெஞ்சே நீ ஏன் கலங்குகிறாய்
தேவனை நோக்கி அமர்ந்திரு

நீ எதிர்பார்க்கும் நன்மைகள்
விரைவில் வருமே வந்திடுமே

1 . உனக்குள் வாழ்பவர் உருவாக்கி மகிழ்பவர்
உன்னோடு பேசுகிறார்
பயப்படாதே மீட்டுக் கொண்டேன்
பெயர் சொல்லி நான் அழைத்தேன்
எனக்கே நீ சொந்தம் – நீ எதிர்பார்க்கும்

2 . எனது பார்வையில்
விலையேறப் பெற்றவன் நீ
மதிப்பிற்குரியவன் நீ
பேரன்பினால் இழுத்துக் கொண்டேன்
அன்பிற்கு எல்லை இல்லை
கிருபை தொடர்கின்றது

Bridge

உன் ஜீவனுக்கீடாய் மக்களினங்கள்
ஜனங்கள் தந்திடுவேன்
கிழக்கு மேற்கு திசைகளில் இருந்து
திரள்கூட்டம் வந்திடுமே

நீ எதிர்பார்க்கும் எழுப்புதல் தேசத்திலே
வருமே வந்திடுமே – நெஞ்சே

வடபுறம் நோக்கி விட்டுவிடு என்று
கட்டளையிடு மகனே ( மகளே )
தென்புறம் நோக்கி கொடு கொடு என்று
ஆணையிடு மகனே ( மகளே )

நீ எதிர்பார்க்கும் எழுப்புதல்

என்னைக் கேளும் நாடுகள�� நான்
சொந்தமாக்கிடுவேன்
பூவுலகும் அதன் எல்லைகள் எல்லாம்
உனது உடைமையாகும்

நீ எதிர்பார்க்கும் எழுப்புதல்

We use cookies to give you the best experience. Cookie Policy