E – Min / 2 / 4 / T – 126
கர்த்தர் என் பெலனானார்
அவரே என கீதமானார் .
மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி
எனது ( நமது ) கூடாரத்தில்
அல்லேலூயா ( 4 )
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு – கர்த்தர்
1 . கர்த்தர் என் பட்சத்தில்
இருப்பதால் பயப்படேன்
மனிதன் எனக்கு எதிராய்
என்ன செய்ய முடியும் – மகிழ்ச்சி குரல்
2 . இந்த நாள் நல்ல நாள்
யேகோவா தந்த நாள்
களிகூர்ந்து மகிழ்ந்திடு
காரியம் வாய்க்கச் செய்வார் – நீ – மகிழ்ச்சி குரல்
3 , ஈக்கள் ( தேனீக்கள் ) போல் பாடுகள்
எனை சூழ்ந்து வந்தாலும்
நெருப்பிலிட்ட முட்கள் போல்
சாம்பலாய் போகின்றன – மகிழ்ச்சி குரல்
4 . கர்த்தரின் வலக்கரம்
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றார்
வெற்றி தருகின்றார் – மகிழ்ச்சி குரல்
5 . விழும்படி தள்ளினார்கள்
என்னை வீழ்த்த முயன்றார்கள்
கர்த்தரோ தாங்கினார்
கரம் நீட்டி உதவினார் – மகிழ்ச்சி குரல்