D – Maj / 6 / 8 | T – 125
எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்
அல்லேலூயா – 8
1 . நிந்தனை போராட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார் 1 கொரி . 10 : 13
2 . ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்திடுவாரே
3 . சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
எரியும் விளக்கேந்தியே
இயேசுவின் பின் செல்லுவேன்