E – min 6 / 8 T – 82
என் மேய்ப்பர் நீர்தானையா
எனக்கென்றும் குறையேயில்லை
நான் ஏன் கலங்கணும்
என் ஆயன் இருக்கையிலே
1 . நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர்
உம் மகிமை விளங்கும்படி – நான் ஏன்
2 . ஆத்துமா தேற்றுகிறீர் ஆவி பொழிகின்றீர்
புது உயிர் தருகின்றீர்
3 . எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர்
விருந்து படைக்கின்றீர்
4 . நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும்
உம் கிருபை பின் தொடரும்
5 . இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
பயமில்லையே பயமில்லையே
வசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா
6 . தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்கின்றீர்
பாத்திரம் நிரம்பி வழிகின்றது