Back

383 . Rethathinaalae | இரத்தத்ததினாலே

E – min 4 / 4 T – 113 


இரத்தத்தினாலே கழுவப்பட்டேன் 

பரிசுத்தமாக்கப்பட்டேன் 

மீட்கப்பட்டேன் திரு இரத்தத்தால் 

அலகையின் பிடியினின்று – நான் 

இரத்தம் ஜெயம் . இரத்தம் ஜெயம் 

இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் – 2 


1 . படைத்தவரே என்னை ஏற்றுக் கொண்டார் 

சிந்தப்பட்ட திரு இரத்தத்தால் – 2 

பாவம் செய்யாத ஒரு மகனைப்போல 

பார்க்கின்றார் பரமபிதா – இரத்தம் ஜெயம் ‘ 


2 . என் சார்பில் தேவனை நோக்கி 

தொடர்ந்து கூப்பிடும் இரத்தம் 

அருள் நிறைந்த இறை அரியணையை 

துணிவுடன் அணுகிச் செல்வோம் – இரத்தம் ஜெயம் 


3 . போர்க்கவசம் என் தலைக்கவசம் 

இயேசுவின் திரு இரத்தமே 

தீய ஆவி ( யும் ) அணுகாது 

தீங்கிழைக்க முடியாது ( எந்த ) – இரத்தம் ஜெயம் 


4 . சுத்திகரிக்கும் தூய்மையாக்கும் 

வாழ்நாளெல்லாம் தினமும் 

நன்மையான காரியங்கள் 

நமக்காய் பரிந்து பேசும் – இரத்தம் ஜெயம் 


5 . சாவுக்கேதுவான கிரியை நீக்கி 

பரிசுத்தமாக்கும் இரத்தம் 

ஜீவனுள்ள தேவனுக்கு 

ஊழியம் செய்வதற்கு – இரத்தம் ஜெயம் 

We use cookies to give you the best experience. Cookie Policy