Back

384 . நான் மன்னிப்படைய | Naan Mannippadaiya

D – Maj 4 / 4 T – 90 

நான் மன்னிப்படைய நீர் தண்டிக்கப்பட்டீர் 

மீட்படைய நொறுக்கப்பட்டீர் – 2 

நீதிமானாக்க பலியானீர் 

நித்திய ஜீவன் தந்தீர் 


அன்பே , பேரன்பே 


1 . காயப்பட்டீர் நான் சுகமாக 

என் நோய்கள் நீங்கியதே 

சுமந்து கொண்டீர் என் பாடுகள் 

சுகமானேன் தழும்புகளால் 

இம்மானுவேல் இயேசு ராஜா 

இவ்வளவாய் அன்புகூர்ந்தீர் – அன்பே 


2 . சாபமானீர் என் சாபம் நீங்க 

மீட்டீரே சாபத்தினின்று 

ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் 

பெற்றுக்கொண்டேன் சிலுவையினால் – இம்மானுவேல் 


3 . ஏழ்மையானீர் சிலுவையிலே 

செல்வந்தனாய் நான் வாழ 

பிதா என்னை ஏற்றுக்கொள்ள 

புறக்கணிக்கப்பட்டீரையா – இம்மானுவேல் 


4 . மகிமையிலே நான் பங்கு பெற 

அவமானம் அடைந்தீரையா 

ஜீவன் பெற சாவை ஏற்றீர் 

முடிவில்லா வாழ்வு தந்தீர் – இம்மானுவேல்

We use cookies to give you the best experience. Cookie Policy