Back

387 . Thalaigal Uyaratum | தலைகள் உயரட்டும்

D – Maj 2 / 4 T – 125 

தலைகள் உயரட்டும் கதவு திறக்கட்டும் 

இராஜா வருகிறார் – இயேசு – 2 

யார் இந்த ராஜா . மகிமையின் ராஜா – 2 – தலைகள் 

1 . வாசல்களே தலைகளை உயர்த்துங்கள் 

கதவுகளே திறந்து வழிவிடுங்கள் – 2  

படைகளின் ஆண்டவர் பராக்கிரமம் நிறைந்தவர் 

உள்ளே நுழையட்டும் – 2 

உள்ளே நுழையட்டும் – யார் இந்த 

2 . மண்ணுலகம் கர்த்தருக்கு சொந்தமன்றோ 

அதன் குடிகள் எல்லாம் 

அவரின் உடமை அன்றோ – 2 

தேடுவோம் அவரை நாடுவோம் தினமும் 

இரட்சகர் இயேசுவை – 2 

இரட்சகர் இயேசுவை – யார் இந்த 

3 . கர்த்தர் மலைமேல் ஏறத்தகுந்தவன் யார் ? 

அவர் சமூகத்திலே நிற்கத்தகுந்தவன் யார் ? – 2 

சுத்தமான கைகள் தூய்மையான இதயம் 

உடையவன் தானே – 2 

உடையவன் தானே – தலைகள் 

4 . கர்த்தர் சமூகம் தேடும் சமுதாயம் நாம் 

அவராலே ஆசீர் பெற்ற சபை நாம் – 2 

நீதிமான்கள் என்று கர்த்தர் தாமே நமக்கு 

தீர்ப்பு கூறிவிட்டார் – 2 

தீர்ப்பு கூறிவிட்டார்

We use cookies to give you the best experience. Cookie Policy