Back

388 . Anandha Kalipulla | ஆனந்த களிப்புள்ள

D – Maj 4 / 4 T – 127

ஆனந்த களிப்புள்ள உதடுகளால் 

போற்றிப் புகழ்கின்றேன் – 2 

அறுசுவை உணவு உண்பது போல் 

திருப்தி அடைகின்றேன் – 2 

தினமும் துதிக்கின்றேன் – ஆனந்த 


1 . மேலானது உம் பேரன்பு 

உயிரினும் மேலானது – 2

உதடுகள் துதிக்கட்டும் 

உயிருள்ள நாளெல்லாம் – 2 

உயிருள்ள நாளெல்லாம் – ஆனந்த 


2 . தேவனே நீர் என் தேவன் 

தேடுவேன் ஆர்வமுடன் – 2 

மகிமை வாஞ்சிக்கின்றேன் 

உம் வல்லமை காண்கின்றேன் – 2 

வல்லமை காண்கின்றேன் . 


3 . நீர்தானே என் துணையானீர் 

உம் நிழலில் களிகூறுவேன் – 2 

உறுதியாய் பற்றிக் கொண்டேன் 

உம் வலக்கரம் தாங்குதையா – 2 

வலக்கரம் தாங்குதையா 


4 . கைகளை நான் உயர்த்துகிறேன் 

( உம் ) திருநாமம் சொல்லி சொல்லி – என் 

படுக்கையில் நினைக்கின்றேன் 

இரவினில் தியானிக்கின்றேன் – 2 

இரவினில் துதிக்கின்றேன்

We use cookies to give you the best experience. Cookie Policy