E – min / 2 / 4 / T – 122
கர்த்தரை நான் எக்காலத்திலும்
ஸ்தோத்தரிப்பேன் ஸ்தோத்தரிப்பேன்
அவர் புகழ் எப்பொழுதுமே
என் நாவில் ஒலித்திடுமே – 2
ஆனந்தமே பேரின்பமே
ஆடலுடன் புகழ் பாடுவோமே – 3
நல்லவர் வல்லவர்
காண்பவர் காப்பவர் – கர்த்தரை
1 . ஆத்துமா கர்த்தருக்குள் மேன்மை பாராட்டும்
எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பார்கள் – 2
இணைந்து துதித்திடுவோம்
( அவர் ) நாமம் உயர்த்திடுவோம் – ஆனந்தமே
2 . துணை வேண்டி நான் மன்றாடினேன்
மறுமொழி பகர்ந்தார் அவர் எனக்கு – 2
எல்லாவித அச்சத்தினின்றும்
அவர் என்னை விடுவித்தார் – 2 – ஆனந்தமே
3 . ஜீவனை விரும்பி நன்மை காண
நெடுநாள் வாழ்ந்திட விருப்பம் உண்டோ – 2
தீய சொல் வஞ்சக மொழி
நம்மை விட்டு விலக்கிடுவோம் – 2 – ஆனந்தமே
4 . நோக்கிப் பார்த்தேன் முகம் மலர்ந்ததேன்
அவமானம் அடைய விடவில்லை – 2
கூவி அழைத்தேன் நான்
செவி சாய்த்து பயம் நீக்கினார் – 2 – ஆனந்தமே