D – min 6 / 8 / T – 90
நீங்கதான் எல்லாமே ,
உம் ஏக்கம்தான் எல்லாமே – 2
சித்தம் செய்யணுமே ,
செய்து முடிக்கணுமே – 2 – நீங்கதான்
1 . கரங்கள் பிடித்தவரே ,
கைவிட்டு விடுவீரோ – 2
இதுவரை நடத்தி வந்த
எபிநேசர் நீர்தானையா – 2 – சித்தம்
2 . நீரே புகலிடம் சங் , 32 : 7
எனது மறைவிடம் – 2
இன்னல்கள் வேதனைகள்
மேற்கொள்ள முடியாதையா – 2 – சித்தம்
3 . என்மேல் கண் வைத்து
அறிவுரை கூறுகின்றீர் – 2
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுகின்றீர் – 2 – சித்தம்
4 . கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்
களிகூர்ந்து துதிக்கின்றேன் – 2
நீதிமானாய் மாற்றினீரே
நித்தம் பாடுகின்றேன் – 2 – சித்தம்
5 . ஆனந்த தைலத்தினால்
அபிஷேகம் செய்தவரே – 2
துதி உடை போர்த்தி
தினம் துதிக்கச் செய்பவரே – 2 – சித்தம் –